பாரதத்தின் சரித்திரம் ஓர் உயர்ந்த கலாச்சாரத்தை பிரதிபலிக்கிறது. இதை ஆழ்ந்து பார்க்கையில் பல வேறுபட்ட பண்பாடுகள், மொழிகள், பழக்க வழக்கங்கள், கலைகள் போன்ற வேற்றுமைகளிலும் ஒரு ஒற்றுமையைக் காணலாம். நம் நாட்டில், சமூக கண்ணோட்டத்தில் பார்த்தாலும் சரி அல்லது சமய அடிப்படையில் பார்த்தாலும் சரி, அரங்கக் கலைகளான இசை, நடனம், நாடகம் ஆகியவை பிரத்தியோகமான இடத்தைப் பெற்றுள்ளன. சாஸ்திரிய இசையின் இரண்டே வகையான பிரிவுகளாவன, தென்னிந்தியாவின் கர்நாடக சங்கீதமும், வடஇந்தியாவின் இந்துஸ்தானி சங்கீதமும் ஆகும். ஆனால் பாரதத்தில் பல வகையான சாஸ்திரிய நடனங்கள் உள்ளன. அவையாவன பரத நாட்டியம்,ஒடிசி,கதகளி, கதக் ,மணிப்புரி ,மேலைத்தேய நடனம்
.
நடராசர் திருவுருவவம் ஐந்தொழில்களையும்
விளக்கி நிக்கிறது. அதாவது, படைத்தல் உடுக்கையிலும், காத்தல் அபயக்கரத்திலும், அழித்தல் எரிதாங்கிய கையிலும், மறைத்தல் ஊன்றிய காலிலும், அருளல் தூக்கிய காலிலும் குறியீடாக உள்ளனவென்று சிவஞான சாத்திரங்கள் கூறுகின்றன. இங்ஙனமே நடராசர் உற்சவத்திலும் ஐந்தொழில்கள் உள்ளன.